Saturday, 25 May 2013

மெய் நீதிக் கதைகள் - 1



செய்ய சிறந்த உதவி!

ஒரு ஊரில் இரண்டு பெரிய மனிதர்கள் இருந்தார்கள். இருவருமே பிறருக்கு உதவி செய்வதில் கர்ணனைப்போல் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள். ஒருவர் நீலகண்டன். இன்னொருவர் பெரியசாமி.
ஒருநாள் நீலகண்டன் தன் வீட்டில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பெரியவர், நீலகண்டனிடம் அய்யா நமது ஊருக்கு "மெய்" என்பவர் வந்திருக்கிறார். அவர் ஒரு மகான். இமயமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுக்கு உலக அறிவை சொல்லிக் கொடுப்பவராம்.
இப்பொழுது ஒரு யாத்திரை காரணமாய் நம் ஊரில் சில நாட்கள் தங்கி இருக்கிறார். அவரிடம் சென்று நம் ஊர் மக்கள் எல்லோரும் ஆசிர்வாதம் பெற்று வருகிறார்கள். நீங்களும் சென்று ஆசிர்வாதம் பெற்று வாருங்கள் என்றார். நீலகண்டனும் சரி என்றார்.
மகான் மெய் பற்றிய விவரம் பெரியசாமிக்கு தெரியவர அவரும் மகானை காண ஆவல் கொண்டார்.
நீலகண்டன் மகானிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கி கொண்டார். பின் விடைபெறும்போது குருவே நான் எல்லா வசதிகளையும் அனுபவித்து விட்டேன். யாருக்கும் தீங்கு இளைத்தது இல்லை. இயலாதோர்க்கு உதவி செய்வதை கடமையாக நினைப்பவன். எனக்கு சொர்க்கம் கிடைக்குமா என்றார்.

நாளை மறுநாள் காலை இந்த ஊரின் வடக்கு எல்லையில் உள்ள ஆலமரத்திற்குப் போ. அங்கே ஒரு பெரியவர் வருவார். அவர் மகா துறவி. அவருக்கு சாப்பிடுவதற்கு ஏதாவுது கொடு. உடனே வானிலிருந்து ஒரு பல்லக்கு வரும் அது உன்னை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் என்றார். மகானிடம் விடை பெற்றார் நீலகண்டன்.
அடுத்த நாள் பெரியசாமியும் மகான் மெய் அவர்களை சந்தித்தார். அவருக்கும் சொர்க்கம் செல்வதற்கான வழியை சொன்னார் மகான். விடை பெற்றார் பெரியசாமி.
அடுத்த நாள் காலை உணவை எடுத்துக் கொண்டு நீலகண்டன் ஆலமரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மகா துறவி கண்மூடி அமர்ந்திருந்ததை பார்த்த ஆவலில் சந்தோசத்துடன் சென்றார் நீலகண்டன். அப்பொழுது பெரியசாமியும் உணவை எடுத்து வந்து கொண்டிருந்தார். அதை பார்த்த நீலகண்டன் சரி இருவரும் கொடுப்போம். யாரிடம் துறவி உணவை வாங்குகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்து விட்டு தொடர்ந்து நடந்தார்.

ஆனால் பெரியசாமி என்ன நினைத்தாரோ தொடர்ந்து நடக்காமல் அப்படியே நின்று விட்டார். நீலகண்டன் உணவை அந்த மகா துறவி சாப்பிட்டார். வானிலிருந்து ஒரு பல்லக்கு வந்து பெரிய சாமியை சொர்க்கத்துக்கு அழைத்து சென்றது.
நீலகண்டனுக்கு வருத்தம் இல்லை என்றாலும் குழப்பம் ஏற்பட்டது. உணவு நான் கொடுக்க பெரியசாமிக்கு எப்படி சொர்க்கம் கிடைத்தது.
மீண்டும் சென்று மகான் மெய் அவரை சந்த்தித்து விடை கேட்டார். மகான் சொன்னார், நீ அந்த துறவிக்கு உதவி செய்தாய். ஆனால் பெரியசாமி நீ துறவிக்கு உதவி செய்ய உனக்கு விட்டுகொடுத்தார். நீ துறவிக்கு உதவி செய்ய உனக்கு உதவினார் பெரியசாமி. அதனால் அவருக்கு முதலில் சொர்க்கம் கிடைத்தது என்றார். உனக்கும் ஒருநாள் கிடைக்கும் என்று வாழ்த்தி அனுப்பினார் மகான் மெய்.

Monday, 20 May 2013

உதவி செய்யும்பொழுது தயங்காதே!

உதவி
செய்யும்பொழுது தயங்காதே!
உதவி
கேட்கும்பொழுது தயங்கு!
எபோழுதும்
கொடுப்பவனாக இரு!
கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லையே என்று
வருத்தப்படாதே
புன்னகையை விட அழகான பரிசு வேறென்ன!

Thursday, 16 May 2013

நீ அதிகம் நேசிக்கும் ஒருவரிடம் கோபப்படு.

என் மீது
ஏன்
அடிக்கடி கோபப்படுவதில்லை
என்று
நீ அதிகம் நேசிக்கும் ஒருவரிடம்
கோபப்படு.
ஏனெனில்
உரிமையோடு வரும்
சின்ன சின்ன கோபம்தான்
உண்மையான அன்பின் வெளிப்பாடு.

Tuesday, 14 May 2013

உனக்காக யார்?

உன்னோடு யார் வாழ்கிறார்கள்
என்பது முக்கியமல்ல
உனக்ககாக யார் வாழ்கிறார்கள்
என்பதுதான் முக்கியம்

Sunday, 12 May 2013

மௌனம் உடைந்தது வார்த்தை பறவையானது - அத்தியாயம் -1

மௌனம் உடைந்தது வார்த்தை பறவையானது - முன்னுரை


குருவே போற்றி

முன்னுரை : 

உனக்காக நான் எழுப்பவிருக்கும் காதல் சின்னத்தின் நுழைவாயில்தான் அந்த தாஜ்மஹால் என்ற கம்பீரத்தோடுதான் ஒவ்வொரு காதலனும் காதலின் உச்சத்தைத் தொட எத்தனிக்கிறார்கள்.

உலகம்  மூன்று பங்கு நிலத்தாலும், ஒரு பங்கு நீராலும் சூழப்பட்டது. ஆனால் உலகம் முழுவதுமே காதலால் சூழப்பட்டது என்றால் அது மிகையல்ல. மனிதர்கள் நெருங்காத காட்டுச்செரிவில் கூட பறவைகள் பூச்சிகள் காதலிக்கின்றனவே.

காதல் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலக மக்கள் தொகை இரண்டு அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்கும். ஆனாலும் காதல் ஒரு இனப்பெருக்க வங்கி அல்ல. அது மனதை உழுவதற்கான யுக்தி.

காதலின் நோக்கம் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து மூன்றாவதல்ல. ஒன்றும் அதில் சேர்ந்த இன்னொன்றும் கரைந்து பூஜ்ஜியமாகிப் போகவேண்டும்.
காதல் ஒரு பைத்தியக்காரத்தனம் என்பார்கள்.
போகட்டும் பைத்தியங்கள்தான் உலகின் உண்மை சுகவாசிகள்.  

புல்வெளியில் நடக்கும் காதலர்களை பார்க்கிறோம். அவர்கள் உண்மையில் புல்வெளியில் நடக்கவில்லை. அவர்கள் நடப்பது பால்வெளியில்.
அவர்களிடம் கொண்டு பொய் ஒரு டம்ளர் விஷத்தைக் கொடுங்கள், குடித்துவிட்டு இன்னொரு டம்ளர் கேட்ப்பார்கள்.

காதல் சுகமானது மட்டுமல்ல. லேசானதும் கூட. காதலிப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் எப்பொழுதுமே சுய நினைவோடு இருப்பதில்லை.
அழகழகான கனவுகளை சுமந்து கொண்டு கோழி இறகாய் பறந்து கொண்டிருப்பார்கள்.

காதலொன்றும் பாவமான காரியமல்ல. நம் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளும் தவறானவைகள் அல்ல. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது என்று ஒருசிலர் தவறாக சித்தரித்து விட்டிருக்கிறார்கள்.
உண்மையான காதலர்களுக்கு திருமணம் கூட சம்பிரதாயத்துக்குத்தான்.
இரண்டு மனங்களை பரிமாறிக்கொண்டு ஆனால் இரண்டு மாலைகளை மாற்ற முடியாத அவல நிலை, இந்த மனித பிரவிகளுக்குத்தான். பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ அல்ல.

உருகி உருகி உள்ளே சொல்லப்பட்டிருக்கும் காதல் உண்மையில் காதலர்களுக்காக  மட்டுமல்ல.
காதல் மீது யாரேனும் தவறான மரியாதை கொண்டிருப்பாரேயானால் அவர்களுக்காக.

எங்கேயோ கேட்ட காதல் ஒன்று எனக்குள் வந்து தன்னை எழுதிக்கொண்டது. படித்துப்பார்த்தேன். அதில் நிறைய காதலும் கொஞ்சம் கண்ணீரும் இருந்தது.
எவ்வளவோ முயன்று பார்த்தும் தேம்பித் தேம்பி அழும் என் பேனாவிற்கு ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை

இந்த புத்தகத்தை படித்துவிட்டு துடிக்கும் உங்கள் இதயத்திற்கு மட்டும்
எப்படி என்னால் ஆறுதல் சொல்ல முடியும்.

அன்புடன்
ரக்சகன்
13-05-2013

பென்சிலை சீவிடும் "பெண்"சிலை!

ஊருக்கு சென்றிருந்தேன்
அவள் என் வீடிற்கு வந்திருந்தாள்
என்னை பார்த்ததும்
ஓடி ஒளிந்து கொண்டாள்
சிறிது நேரத்திற்கு பிறகு என்னருகில் வந்தாள்
வெட்கம் வந்ததால்
முகத்தை குனிந்து நின்றாள்.
முகத்தை நிமிர்த்தி
... என்னை பிடிக்குமா என்றேன்
பிடிக்கும் என்றாள்
எவ்வளவு பிடிக்கும் என்றேன்
நிறைய என்றாள்
அப்படிஎன்றால்
நான் கேட்கும் போதெல்லாம்
முத்தம் கொடுக்க வேண்டும் என்றேன்
சரி என்றாள்
நீ கேட்காமலேயே
உனக்கு முத்தம் கொடுப்பேன் என்றேன்
முகத்தை மூடிகொண்டாள்
என் விரலுக்கு சொடுக்கு எடுத்து விடவேண்டும் என்றேன்.
ம் என்றாள் .
மாமா என்றெல்லாம் வேண்டாம்
என் பேர் சொல்லி கூப்பிடு என்றேன்
சரி என்றாள்.
என்னை கட்டிகொள்கிறாயா என்றேன்
சிறிது யோசித்து விட்டு
ம் என்றாள்.
இப்பொழுதே ஓடிப்போகலாமா என்றேன்
யோசிக்காமல்
சிரித்துக்கொண்டே தலையசைத்தாள்
மூன்று வயதே ஆன
என் அக்கா மகள்.
பென்சிலை சீவிடும் என் பெண்சிலை!

உன்னிடம் இருக்கும் அழகு

சிலர்
அழகாக பிறந்திருக்கிறார்கள்
சிலர்
அழகாக சிரிக்கிறார்கள்
சிலர்
அழகாக பேசுகிறார்கள்
சிலர்
அழகாக நடக்கிறார்கள்
சிலர்
அழகாக கண் சிமிட்டுகிறார்கள்
... சிலர்
அழகாக திரும்பி பார்க்கிறார்கள்
சிலர்
அழகாக ஆடை உடுத்துகிறார்கள்
ஆனாலும்
சிலர்தான்
அழகாக வாழ்கிறார்கள் .