கவிதைப் போட்டிகளில் பங்கேற்று நான் வாங்கிய முதல் பரிசு கவிப்பேரரசர்
வைரமுத்துவின் ஒரு கவிதைப் புத்தகம். அன்றிலிருந்து இன்றுவரை
கவிப்பேரரசரின் ஒவ்வொரு புத்தகம் வெளிவந்த போதும் உடனே வாங்கிப் படிப்பேன்.
அப்பொழுதெல்லாம் அத்தகைய மகா கவிஞரை சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
இதோ இன்று என் கவிதைப் புத்தகங்களை கவிப்பேரரசரிடம் கொடுத்தேன். புத்தகத்தைப் புரட்டினார், படித்தார், இளநகை புரிந்தார், பாராட்டினார், வாழ்த்தினார். மொழியே அறியாத ஒரு குழந்தையைப் போல தலையாட்டி வைத்தேன்.
இதோ இன்று என் கவிதைப் புத்தகங்களை கவிப்பேரரசரிடம் கொடுத்தேன். புத்தகத்தைப் புரட்டினார், படித்தார், இளநகை புரிந்தார், பாராட்டினார், வாழ்த்தினார். மொழியே அறியாத ஒரு குழந்தையைப் போல தலையாட்டி வைத்தேன்.
இதோ,
கவிப்பேரரசரை சந்தித்த அந்த உன்னத நிமிடங்கள்.



