Monday, 9 June 2014

கவிப்பேரரசரை சந்தித்த அந்த உன்னத நிமிடங்கள்

கவிதைப் போட்டிகளில் பங்கேற்று நான் வாங்கிய முதல் பரிசு கவிப்பேரரசர் வைரமுத்துவின் ஒரு கவிதைப் புத்தகம். அன்றிலிருந்து இன்றுவரை கவிப்பேரரசரின் ஒவ்வொரு புத்தகம் வெளிவந்த போதும் உடனே வாங்கிப் படிப்பேன். அப்பொழுதெல்லாம் அத்தகைய மகா கவிஞரை சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இதோ இன்று என் கவிதைப் புத்தகங்களை கவிப்பேரரசரிடம் கொடுத்தேன். புத்தகத்தைப் புரட்டினார், படித்தார், இளநகை புரிந்தார், பாராட்டினார், வாழ்த்தினார். மொழியே அறியாத ஒரு குழந்தையைப் போல தலையாட்டி வைத்தேன். 
இதோ,


கவிப்பேரரசரை சந்தித்த அந்த உன்னத நிமிடங்கள்.









Tuesday, 29 April 2014

மதிப்பிற்குரிய திரைப்பட நடிகர் திரு.கரண் அவர்களிடம் என் கவிதை புத்தகங்களை கொடுத்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்





Thursday, 17 April 2014

நம் நாட்டின் கறை தீர நம் விரலில் கறை(மை) படியட்டும்!


                            வரும் பாராளுமன்ற தேர்தலைப்பற்றி நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர் ஒருவர் "தேர்தலில் ஓட்டுப் போட போவதில்லை என்றும், அதற்குக் காரணமாக, தேர்தலை வியாழக்கிழமை வைத்து விட்டார்கள் என்றும், 
ஒரு ஓட்டு போடுவதற்காக 400, 500கிலோமீட்டர் பயணித்து சொந்த ஊருக்குசெல்ல முடியாது, மேலும் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அலுவலகம் வர வேண்டுமே என்றார்.
ஒரு சிலர் அதை ஆமோதித்தார்கள்.
இதே மன நிலையில் நம்மில் பல பேர் இருப்பதை பார்க்க முடிகிறது.

நண்பர்களே! இதை எப்படி சாதாரண விசயமாக எடுத்துக்கொள்ள முடியும்.
இந்திய சுதந்திரத்தை கடைசியில் அகிம்சை என்ற ஆயுதம் வாங்கி தந்தாலும், அந்த ஆயுதத்தைஉருவாக்க எத்தனை ஆயிரமாயிரம் உயிர்களை விலை கொடுத்திருக்கிறோம்.
அந்த ஒவ்வொரு உயிரும் விலை கொடுக்கப்பட்டதான் காரணம்,
> இந்தியர்களின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்றவா?
> இந்தியர்கள் அகிம்சாவாதிகள் என்று உலகிற்குச் சொல்லவா?
> அடுத்தடுத்த தலைமுறைகளான நாம் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காகவா?
> அடுத்தடுத்த தலைமுறைகளான நாம் டாக்டர், கணிப்பொறியாளர் ஆகவேண்டும் என்பதற்காகவா???
இல்லை! இல்லை!
சத்தியமாக இல்லை!
இவை எல்லாம் வெள்ளையர் ஆட்சி நடந்திருந்தாளும் நமக்குக் கிடைத்திருக்கும்.
அப்படியென்றால் 200 ஆண்டுகால போராட்டத்தில் விளம்பரம், புகழ் என்று எதிர்பார்க்காமல் பல்லாயிரம் பேர் அடி பட்டும் சிறையில் நோய்வாய்ப்பட்டும் இறந்தது எதற்காக?
எதற்காக?
ஆம் இந்தியாவில் தேர்தல் நடக்க வேண்டும்!
அதை இந்திய அரசே நடத்த வேண்டும்!
அதில் இந்தியனே போட்டியிட வேண்டும்!
அதில் இந்தியனே வாக்களிக்க வேண்டும்!
அதில் ஒரு இந்தியனே வெற்றி பெற வேண்டும்!
அவனே இந்தியாவை ஆளவும் வேண்டும்
என்ற ஒரே நோக்கத்திற்காகவே.
ஆம் இந்தியனை ஆளப்போகிறவனை இந்தியனே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக.
தன் வீட்டுப் பெண்ணை கட்டிகொடுக்கும் போது நூறு முறை யோசித்து, ஆயிரம் இடம் தேடி, நல்ல மனிதனிடம் கொடுக்கிறோம்.
ஒரு தனிப்பட்டவரின் வாழ்க்கைக்கே இவ்வளவு சிரத்தை என்றால் 100 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை ஒருவரிடம் கொடுக்க போகிறோம்.
அந்த தேர்தலில் உங்கள் பங்கு இல்லை என்றால் முறையா?
நாட்டுப்பற்றை வெளிப்படுத்த யாரும் நாட்டிற்காக ரத்தம் சிந்த வேண்டியதில்லை.
நிகழப் போகும் பாராளுமன்றத் தேர்தலில்
தங்கள் வாக்கை தவறாமல் அளித்தாலே போதும்.
ஜெய்ஹிந்த்.
-- கவிஞர் ரக்சகன்

Monday, 31 March 2014

மௌனம் உடைந்தது வார்த்தை பறவையானது

காதலின் நோக்கம் ஒன்றும் ஒன்றும் சேர்ந்து மூன்றாவதல்ல.
ஒன்றும் அதில் சேர்ந்த இன்னொன்றும் கரைந்து பூஜ்ஜியமாகிப் போகவேண்டும்.

காதல் ஒரு பைத்தியக்காரத்தனம் என்பார்கள்.
போகட்டும் பைத்தியங்கள்தான் உலகின் உண்மை சுகவாசிகள்.

எங்கேயோ கேட்டகாதல் ஒன்று எனக்குள் வந்து தன்னை எழுதிக் கொண்டது.
அதில் நிறைய காதலும் கொஞ்சம் கண்ணீரும் இருந்தது.

ஆனால்அந்தக் கண்ணீர் தாரைதாரையாய் சிந்தப்பட்டதல்ல.
வாழ்வின் சில அனிச்சை நேரங்களில் கடலளவு சோகம்
கண்களைபொத்துக்கொண்டு வர எத்தனித்தாலும்
ஜன்னலோரத்தில் நின்று யாரும் அறியா வண்ணம் ஒரு
சொட்டுக் கண்ணீரை உதிர்த்துவிட்டுப் போவோமே நம்மில் பலர்,
அதைப் போன்றது.

உருகி உருகி உள்ளே சொல்லப்பட்டிருக்கும் காதல் உண்மையில் காதலுக்கு
மரியாதை ஏற்படுத்துவதற்காக அல்ல. காதலர்களுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காக.


இந்த புத்தகத்தை ஆன்லைனில் பெற கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

மௌனம் உடைந்தது வார்த்தை பறவையானது

மேலும் தொடர்புக்கு.
ரக்சகன்
mail.rakchagan@gmail.com