Sunday, 7 April 2013

கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா?


நீண்ட வருடங்களாக இந்த கேள்வி நம்மிடத்திலே இருந்து வந்தாலும்
இதற்கான சரியான பதில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அறிந்தவர்களும் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
இறுதியில் எனக்குள்ளே தேடினேன். இதோ அது.

நாம் காண்கின்ற இந்த பூமி, தோன்றிய போது இப்படி இல்லை.
நீர் நிலைகள் தோன்ற சில லட்ச வருடங்கள் ஆனதாம். அதில் பூச்சிகள், நீர் வாழ் உயிரினங்கள் தோன்ற சில கோடி வருடங்கள் ஆனதாம். மரங்கள் பறவைகள் தோன்றவும் சில கோடி ஆண்டுகள் ஆனது
என்று அறிவியல் சொல்கிறது.

சரி நம் பிரச்சனைக்கு வருவோம்.
அரசர்கள் காலத்திலே சொல்லப்பட்ட அன்னப்பறவையை இன்று நாம் பார்ப்பது அபூர்வம்.மாடப்புறாவும் நாம் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது பறவையினங்கள் தோன்றிக்கொண்டே இருகின்றன.

வேடந்தாங்கலுக்கு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பறவையினங்கள் வருகின்றன. அவை பருவம் முடிந்து திரும்புகையில்
இன்னும் நூற்றுக்கான புதிய வகை பறவையினங்களை உற்பத்தி செய்துவிட்டுச் செல்கின்றன.

ஆக நாம் பார்க்கிற கோழியும் சில, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியிருக்க முடியும்.

உதாரணத்திற்கு ஆண் அன்னப்பறவையும் பெண் மாடப்புறாவும் புணர்ந்தால் புது வகையான ஒரு புறா கிடைக்கிறது.

அதனடிப்படையில் ஒரு வகை ஆண் புறாவும் இன்னொரு வகை பெண் புறாவும் புணர்ந்ததால் புது வகையான முட்டை வெளிப்பட்டிருக்கும்.
அந்த முட்டையிலிருந்துதான் இன்று நாம் பார்க்கிற கோழி இனத்தின்
முதல் சிசு வெளிப்பட்டிருக்கும்.

ஆக ஒரு முட்டையிலிருந்துதான் கோழி வந்திருக்கிறது என அறிவியலடிப்படையில் நாம் முடிவுக்கு வரலாம்.

நேர்காணல் தேர்விலே இந்த வினாவை இனி யார் கேட்டாலும் விடை இதுதான்.

அவர்கள் வேண்டுமானால் கேள்வியை மாற்றிக் கொள்ளட்டும்.
பறவையிலிருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையிலிருந்து பறவை வந்ததா என்று.

Wednesday, 3 April 2013

பிரபஞ்ச விதி

தோற்றமும் அழிவும்
இந்த 
பிரபஞ்சத்தில் இல்லை
பிரபஞ்சத்திற்கும் இல்லை
ஒன்று அல்லது பல
சேர்ந்து
மற்றொன்றாகிறது.